என் பள்ளி பருவ ஞாபகம் ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்.... பச்சைகுதிரையும், பம்பரமும் நெல்லுச்சோறும்,நொண்டியும் என் ஞாபங்கள்.... அரையனா இருந்தாலே அரண்மணையை விலைக்கு வாங்குதல் போன்ற என் எண்ணம் ஞாபங்கள்... உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல் நண்பனோடு காக்கா கடி கடித்து தின்ற தின்பண்டங்கள் என் ஞாபங்கள்... பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய காத்திருந்து காத்திருந்து கடைசியில் கிழிந்த உடையை அணிந்து சென்ற பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்.... தெய்வீக யாத்திரையை விட என் பள்ளி யாத்திரை அதிகம் -என்ற என் ஞாபங்கள்.... மஞ்சள் பையும் மண்பானை நீரும் என் ஞாபங்கள்... கடைசியில் என் உண்மையை ஞாபகம் ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதேசி நான்....என்ற என் ஞாபங்கள்....
இடுகைகள்
ஜனவரி 9, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது