இடுகைகள்

மார்ச் 24, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
திருக்குறள் -கவிதை குறள்: "அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சே" 1081 கவிதை: நேற்று சோலையிலே (அ) நகர்புற சாலையிலே நான் கண்டவள்  வானத்தில் இருந்து வந்த தேவதையோ-இவள் தேவலோகத்து தெய்வ மகளோ-இவள் சோலை வனத்தில் அசைந்தாடும் மயிலோ-இவள் அழகிய ஆபரணங்கள் அணிந்த  அழகிய மானிடப் பொண்னோ! யார் இவள் என அறியாமல்  அவள் மீது காதல் கொண்டு மயங்குவது  ஏன்.....என் நெஞ்சே... குறள்: "உள்ளக் களித்தலும் கன மகிழ்தலும்  கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு " கவிதை: நினைத்தால் மயக்கம் பார்த்தால் கிறக்கும்  காதலுக்கு தான் உண்டு  கள்ளுக்கு இல்லை.. குறள்: "முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகை மொக்குள் உள்ள தொன்று உண்டு" கவிதை: மலரின் மொட்டுக்குள்  நறுமணம் மறைந்திருப்பது போல  இந்த பெண்ணின் புன்னகை மொட்டுக்குள் மறைந்திருப்பது காதலா...காமமா....