இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் நூலகம்.....

அறிவு நிறைந்த புதையல் , அனைவரும் விரும்பி உண்ணும் படையல், சான்றோர் தேடி அருந்தும் பானம், இது எல்லையே இல்லாத வானம், கருத்துக்கள் ஊரும் சோலை, ஆசிரியர் இல்லா பாடசாலை, சான்றோர் செல்லும் சுற்றுலாதலம் , புலவர்கள் வார்த்தை சண்டையிடும் போர்களம், பழமை காக்கும் பாத்திரம், நற்பண்புகள் கூறும் நண்பன், உலக செய்திகளை உள்ளடக்கிய உலக உருளை, பல வகை புத்தகம் சேர்த்து செய்த பூமாலை, தினம் தினம் புதுமை பூக்கள் பூக்கும் புத்தக தோட்டம் , சாதி மதம் பார்க்காத பண்டகசாலை வயது வரம்பு இன்றி அனைவருக்கும் பழுதில்லா கல்வி தரும் ஒரே ஒரு கல்வி சோலை, எங்கள் நுலகம் .....

உன்னை நினைத்து...

பெண்ணே!!!        குழலாக நீ                அதில் இசையாக நான்.        தென்றலாக நீ               அதில் தெம்மாங்காக நான்.         கவிதையாக நீ              அதில் வரியாக நான்         மழையாக நீ              அதில் துளியாக நான்.         பாடலாக நீ               அதில் பல்லவியாக நான்.          அழகாக நீ                அதற்கு அடிமையாகி நான்..         திருமணமாகி நீ -(உன்னை நினைத்து)                திருந்தா ஜென்மமாக நான்....                

துன்பம்

துன்பம் இல்லாத வாழ்க்கை இல்லை துன்பம் மட்டுமே  வாழ்க்கை இல்லை-மனிதா துன்பப்படாமல் இருந்து விடாதே!!!  துன்பப்படும் போது இறந்து விடாதே!!!

தோல்வி.

என் வாழ்க்கையில் என்றுமே தோல்வி-தான் வெற்றியை நான் தொட்டதே இல்லை.. வருத்தத்துடன் தோல்வி .... தோல்வியுடன் நான்...

எங்கே மனிதநேயம்??

                                                          தமிழ் பண்பாடு (மனித நேயம்)                        மறைந்து போச்சு.... சுயநலம் என்னும் கூண்டுக்குள்                        ஒழிந்து போச்சு..... நாகரீகம் என்னும் பாதாளகுழியில்                         விழுந்து போச்சு.... பரபரப்பான இந்த உலகில் இருந்து                          பரந்து போச்சு......விளைவு நாட்டுக்கு வெளியே             எல்லை சண்டையாச்சு..... நாட்டுக்கு உள்ளே               வீட்டுக்கு வீடு  கொல்லை சண்டையாச்சு....