இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
திருக்குறள் -கவிதை குறள்: இரு நோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக் கொன் நந்நோய் மருந்து"1091 கவிதை: என் அழகிய காதலியே மை தீட்டிய உன் கண்களுக்கு இரண்டு வகை பார்வை உண்டு  உனக்கு துன்பம் தந்து  எனக்கு இன்பம் தரும்  உன் வலது கண்ணால் எனக்கு  நோயை ஏற்படுத்தும் ஒரு பார்வை உனக்கு இன்பம் தந்து  எனக்கு துன்பம் தரும்  உன் இடது கண்களால் எனக்கு  உண்டான நோயிக்கு மருந்தாகிய மற்றொரு பார்வையடி ...
திருக்குறள் -கவிதை குறள்: "அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சே" 1081 கவிதை: நேற்று சோலையிலே (அ) நகர்புற சாலையிலே நான் கண்டவள்  வானத்தில் இருந்து வந்த தேவதையோ-இவள் தேவலோகத்து தெய்வ மகளோ-இவள் சோலை வனத்தில் அசைந்தாடும் மயிலோ-இவள் அழகிய ஆபரணங்கள் அணிந்த  அழகிய மானிடப் பொண்னோ! யார் இவள் என அறியாமல்  அவள் மீது காதல் கொண்டு மயங்குவது  ஏன்.....என் நெஞ்சே... குறள்: "உள்ளக் களித்தலும் கன மகிழ்தலும்  கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு " கவிதை: நினைத்தால் மயக்கம் பார்த்தால் கிறக்கும்  காதலுக்கு தான் உண்டு  கள்ளுக்கு இல்லை.. குறள்: "முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகை மொக்குள் உள்ள தொன்று உண்டு" கவிதை: மலரின் மொட்டுக்குள்  நறுமணம் மறைந்திருப்பது போல  இந்த பெண்ணின் புன்னகை மொட்டுக்குள் மறைந்திருப்பது காதலா...காமமா....