அறிவு நிறைந்த புதையல் , அனைவரும் விரும்பி உண்ணும் படையல், சான்றோர் தேடி அருந்தும் பானம், இது எல்லையே இல்லாத வானம், கருத்துக்கள் ஊரும் சோலை, ஆசிரியர் இல்லா பாடசாலை, சான்றோர் செல்லும் சுற்றுலாதலம் , புலவர்கள் வார்த்தை சண்டையிடும் போர்களம், பழமை காக்கும் பாத்திரம், நற்பண்புகள் கூறும் நண்பன், உலக செய்திகளை உள்ளடக்கிய உலக உருளை, பல வகை புத்தகம் சேர்த்து செய்த பூமாலை, தினம் தினம் புதுமை பூக்கள் பூக்கும் புத்தக தோட்டம் , சாதி மதம் பார்க்காத பண்டகசாலை வயது வரம்பு இன்றி அனைவருக்கும் பழுதில்லா கல்வி தரும் ஒரே ஒரு கல்வி சோலை, எங்கள் நுலகம் .....