இயற்கை சொன்ன அவலம்
ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது இயற்கை...
அடர்ந்து உயர்ந்த
மரங்கள் இருந்த சோலை-இன்று
அகலமான சாலையான அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை...
காவிரி வைகை போன்று
காவிரி வைகை போன்று
கரைபுரண்டு ஓடிய நதிகளில்-இன்று
கழிவு நீர் கலக்கும் அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை...
காடுகளிலும் சோலைகளிலும்
தவழ்ந்து வந்த கார்முகில் தென்றல்-இன்று
மூச்சு அடைத்து போன அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை ..
பொன் விளையும்
விளை நிலங்கள்யாவும் - இன்று
கட்டிடம் கட்ட பொன்
விலைக்கு விற்கப்படும் அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை...
ஊருக்கே நீர்
கொடுத்த ஊரணிகள் -இன்று
ஊனமுற்று இருக்கும் அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை ....
ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொல்லது யார்??
காடுகளிலும் சோலைகளிலும்
தவழ்ந்து வந்த கார்முகில் தென்றல்-இன்று
மூச்சு அடைத்து போன அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை ..
பொன் விளையும்
விளை நிலங்கள்யாவும் - இன்று
கட்டிடம் கட்ட பொன்
விலைக்கு விற்கப்படும் அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை...
ஊருக்கே நீர்
கொடுத்த ஊரணிகள் -இன்று
ஊனமுற்று இருக்கும் அவலத்தை
எழுதென்று சொன்னது இயற்கை ....
ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொல்லது யார்??
கருத்துகள்
கருத்துரையிடுக