அன்பு தங்கை:
அன்பின் கோயிலடி நீ -எனக்கு
ஆறுதல் கூற வந்த
அன்னையடி நீ
அண்ணா என்று நீ அழைக்கும் போது
என் அன்னையின் சாயல் தெரியுதடி ..
உறவுக்கு உறவாய் நீ இருக்கின்றாய்
என் உணர்வோடு நீ கலந்திருக்கின்றாய்...
எது கேட்டாலும் நீண்ட நேரம் யோசிப்பாய்- இறுதியில்
தெரியவில்லை அண்ணா என்று
மீண்டும் என்னையே யாசிப்பாய்...
கருவரை உறவாய் இல்லை என்றாலும்
நாம் இனி கல்லறை வரை
உறவாய் இருப்போம் ...
என் உயிராய் என்
உடன் பிறவா தங்கையே......
கருத்துகள்
கருத்துரையிடுக