வாக்களிப்போம்!!வளம்பெறுவோம்!!
வாருங்கள் மக்களே வாருங்கள் வாங்களிப்போம்!!!
உங்களுக்காக ஓர் விழா
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
நடைபெறும் இலவச திருவிழா!!!
எட்டி உதைக்கப்பட்ட ஏழை
மக்களையெல்லாம் கட்டி பிடித்து
பல கட்டு பணம் கொடுக்கும் பெரு விழா!!!
இவர்கள் அள்ளிதெளிக்கும்
வாக்குறுதிகள் அனைத்தும் கானல் நீர்
இதை நம்பி தாகம் வளர்க்காதீர்கள்...
இவர்கள் பேச்சுகள் அனைத்தும்
கள்ள சிரிப்பும் கபட நாடகமும் தான்...
இவர்களால் ஒரு நாள் சமத்துவம் விடியலாகும்
பத்தானை அணைத்த உடன் மீண்டும் பற்றி எரியும்....
வாருங்கள் மக்களே வாருங்கள் வாக்களிப்போம்
உங்கள் ஒரு ஓட்டிற்கு
நாட்டை நல்வழிப்படுத்தும்
சக்தி உண்டு-இதை
எண்ணி பார்த்திடுவீர்
எனது அன்புக்குரியோரே!!!
வாருங்கள் மக்களே வாருங்கள் வாக்களிப்போம்
யாருக்கு வாக்களிக்க
சாதி மதம் பார்க்காதவரா
இனம் மொழி பற்றி பேசாதவரா
அனைவருக்கும் சமமானவரா
சமுக அக்கறை உள்ளவரா
சமத்துவத்தை நிலைநாட்டுபவரா-என
எண்ணி பார்த்து போடுங்கள் ஓட்டு
பணத்தை எண்ணி பார்த்து போடாதீர்கள்..
வாருங்கள் மக்களே வாருங்கள் வாக்களிப்போம்
உண்மையை கடைபிடுத்து
நேர்மையை நிலைநிறுத்த
வறுமையை களைத்தெரிய
நிலைமையை சரிசெய்ய
ஆல்காட்டி விரலாலே
நல் அரசினை தேர்ந்தெடுப்போம்...
விரலிலே கறுமையை ஏற்று
நாட்டின் வறுமையை போக்குவோம்...
வாருங்கள் மக்களே வாருங்கள் வாக்களிப்போம்
ஓட்டு போடாதது உன் குற்றமா?-அதை
கள்ள ஓட்டாக மாற்றுவது அவர்கள் குற்றமா-இதனை
சிந்தித்து வாக்களிப்போம் வளம்பெறுவோம்
நாட்டை வளம்பெற வைப்போம்....
வாழ்க தமிழ்!!வளர்க ஜனநாயகம் !!!
கருத்துகள்
கருத்துரையிடுக