வா பொங்கலே வா!வா!
உழுதுண்ட உழவனின்
களைப்பை போக்கி
இன்பம் தரும் இனிய
பொங்கலே வா!வா!
என் தமிழ் இனத்தின்
பாரம்பரிய பண்பாட்டு
பொங்கலே வா!வா!
என் தமிழ் மக்களின்
இறைவழிபாட்டு சின்னமான
பொங்கலே வா!வா!
தனக்கு உதவிய உயிரினங்களுக்கு
தன் பாசத்தை காட்டும்
பாச பொங்கலே வா!வா!
என் இளைஞர்களால்
கடற்கரையில் மீட்டெடுக்கப் பெற்ற
வீர பொங்கலே வா! வா!
பல கோடி மக்களின் வீட்டில்
இன்பம் பொங்க வைத்த என்
உழவனின் கண்ணில் கண்ணீர் பொங்க
இன்பம் துன்பம் இரண்டும்
கலந்து வாழும் வாழ்வை மாற்றி
புன்னகை பூக்க மீண்டும்
பசுமை புரட்சி பொங்கலே வா!வா!
கருத்துகள்
கருத்துரையிடுக