யார் இவள் ...
யார் இவள் ...
இந்த உலகத்தினை அறியும் முன்பு
என்னை தனி அறையில் பாதுகாத்தவள்..
யார் இவள்...
நான் பிறக்கும் போது எனக்காக
முதல் கண்ணீர் துளிகளை சிந்தியவள்....
யார் இவள்...
என் பசிக்காக தனது உதிரத்தை
திரித்து எனக்கு உணவு கொடுத்தவள்...
யார் இவள்...
அன்பு ,பாசம்,அக்கறையால்
என் வாழ்நாள் முழுவதும் அரவணைத்தவள்...
யார் இவள்..
பலர் கூறும் பக்கம் பக்கமான
விமர்ச்சனங்களை பக்குவமாக எடுத்துக்கூறுபவ ள்...
யார் இவள்...
தன் வாழ்வில் தாய்,அம்மா,கடவுள்-என்று
எழுத்துக்களில் மட்டும் பதிவி உயர்வு பெற்றவள்....
யார் இவள் ...
முதிந்த குழந்தை பட்டாம்பூச்சி என்று
அறியாமல் முதியோர் இல்லத்தில் பூட்டி
அவளின் அன்பு சிறகுகளை சிதைக்கின்றோம்...
யார் இவள்... யார் இவள் என்று அறியாமல்
இந்த அவசர உலகில் அலைமோதுகின்றோம்...
யார் இவள்...
நம்மை ஈன்று எடுத்த அன்னை என்று
அறியும் போது அவள் உண்மையான பதவி உயர்வு பெருகின்றாள்...சொர்கத்தில்...
நம்மை குழந்தையாக அரவணைத்தவளை ...
நாம் நம் குழந்தையாக அரவணைப்போம்..
அவள் பூமியில் வாழும் போதே.....
இனிய அன்னையர் தின வாழ்த்துக்களுடன்
பாலமுருகன் பூப்பாண்டி...
கருத்துகள்
கருத்துரையிடுக