அன்பு தங்கை: அன்பின் கோயிலடி நீ -எனக்கு ஆறுதல் கூற வந்த அன்னையடி நீ அண்ணா என்று நீ அழைக்கும் போது என் அன்னையின் சாயல் தெரியுதடி .. உறவுக்கு உறவாய் நீ இருக்கின்றாய் என் உணர்வோடு நீ கலந்திருக்கின்றாய்... எது கேட்டாலும் நீண்ட நேரம் யோசிப்பாய்- இறுதியில் தெரியவில்லை அண்ணா என்று மீண்டும் என்னையே யாசிப்பாய்... கருவரை உறவாய் இல்லை என்றாலும் நாம் இனி கல்லறை வரை உறவாய் இருப்போம் ... என் உயிராய் என் உடன் பிறவா தங்கையே......
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
இயற்கை சொன்ன அவலம் ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது இயற்கை... அடர்ந்து உயர்ந்த மரங்கள் இருந்த சோலை-இன்று அகலமான சாலையான அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காவிரி வைகை போன்று கரைபுரண்டு ஓடிய நதிகளில்-இன்று கழிவு நீர் கலக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காடுகளிலும் சோலைகளிலும் தவழ்ந்து வந்த கார்முகில் தென்றல்-இன்று மூச்சு அடைத்து போன அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .. பொன் விளையும் விளை நிலங்கள்யாவும் - இன்று கட்டிடம் கட்ட பொன் விலைக்கு விற்கப்படும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... ஊருக்கே நீர் கொடுத்த ஊரணிகள் -இன்று ஊனமுற்று இருக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .... ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொல்லது யார்??
அருமையான வரிகள் ஐயா
பதிலளிநீக்குநன்றி..🙏🙏🙏
பதிலளிநீக்கு