
இடுகைகள்
2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அன்பு தங்கை: அன்பின் கோயிலடி நீ -எனக்கு ஆறுதல் கூற வந்த அன்னையடி நீ அண்ணா என்று நீ அழைக்கும் போது என் அன்னையின் சாயல் தெரியுதடி .. உறவுக்கு உறவாய் நீ இருக்கின்றாய் என் உணர்வோடு நீ கலந்திருக்கின்றாய்... எது கேட்டாலும் நீண்ட நேரம் யோசிப்பாய்- இறுதியில் தெரியவில்லை அண்ணா என்று மீண்டும் என்னையே யாசிப்பாய்... கருவரை உறவாய் இல்லை என்றாலும் நாம் இனி கல்லறை வரை உறவாய் இருப்போம் ... என் உயிராய் என் உடன் பிறவா தங்கையே......
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
யார் இவள் ... யார் இவள் ... இந்த உலகத்தினை அறியும் முன்பு என்னை தனி அறையில் பாதுகாத்தவள்.. யார் இவள்... நான் பிறக்கும் போது எனக்காக முதல் கண்ணீர் துளிகளை சிந்தியவள்.... யார் இவள்... என் பசிக்காக தனது உதிரத்தை திரித்து எனக்கு உணவு கொடுத்தவள்... யார் இவள்... அன்பு ,பாசம்,அக்கறையால் என் வாழ்நாள் முழுவதும் அரவணைத்தவள்... யார் இவள்.. பலர் கூறும் பக்கம் பக்கமான விமர்ச்சனங்களை பக்குவமாக எடுத்துக்கூறுபவ ள்... யார் இவள்... தன் வாழ்வில் தாய்,அம்மா,கடவுள்-என்று எழுத்துக்களில் மட்டும் பதிவி உயர்வு பெற்றவள்.... யார் இவள் ... முதிந்த குழந்தை பட்டாம்பூச்சி என்று அறியாமல் முதியோர் இல்லத்தில் பூட்டி அவளின் அன்பு சிறகுகளை சிதைக்கின்றோம்... யார் இவள்... யார் இவள் என்று அறியாமல் இந்த அவசர உலகில் அலைமோதுகின்றோம்... யார் இவள்... நம்மை ஈன்று எடுத்த அன்னை என்று அறியும் போது அவள் உண்மையான பதவி உயர்வ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வா பொங்கலே வா!வா! உழுதுண்ட உழவனின் களைப்பை போக்கி இன்பம் தரும் இனிய பொங்கலே வா!வா! என் தமிழ் இனத்தின் பாரம்பரிய பண்பாட்டு பொங்கலே வா!வா! என் தமிழ் மக்களின் இறைவழிபாட்டு சின்னமான பொங்கலே வா!வா! தனக்கு உதவிய உயிரினங்களுக்கு தன் பாசத்தை காட்டும் பாச பொங்கலே வா!வா! என் இளைஞர்களால் கடற்கரையில் மீட்டெடுக்கப் பெற்ற வீர பொங்கலே வா! வா! பல கோடி மக்களின் வீட்டில் இன்பம் பொங்க வைத்த என் உழவனின் கண்ணில் கண்ணீர் பொங்க இன்பம் துன்பம் இரண்டும் கலந்து வாழும் வாழ்வை மாற்றி புன்னகை பூக்க மீண்டும் பசுமை புரட்சி பொங்கலே வா!வா!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருக்குறள் -கவிதை குறள்: இரு நோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு நோய் நோக் கொன் நந்நோய் மருந்து"1091 கவிதை: என் அழகிய காதலியே மை தீட்டிய உன் கண்களுக்கு இரண்டு வகை பார்வை உண்டு உனக்கு துன்பம் தந்து எனக்கு இன்பம் தரும் உன் வலது கண்ணால் எனக்கு நோயை ஏற்படுத்தும் ஒரு பார்வை உனக்கு இன்பம் தந்து எனக்கு துன்பம் தரும் உன் இடது கண்களால் எனக்கு உண்டான நோயிக்கு மருந்தாகிய மற்றொரு பார்வையடி ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திருக்குறள் -கவிதை குறள்: "அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர் கொல் மாலும் என் நெஞ்சே" 1081 கவிதை: நேற்று சோலையிலே (அ) நகர்புற சாலையிலே நான் கண்டவள் வானத்தில் இருந்து வந்த தேவதையோ-இவள் தேவலோகத்து தெய்வ மகளோ-இவள் சோலை வனத்தில் அசைந்தாடும் மயிலோ-இவள் அழகிய ஆபரணங்கள் அணிந்த அழகிய மானிடப் பொண்னோ! யார் இவள் என அறியாமல் அவள் மீது காதல் கொண்டு மயங்குவது ஏன்.....என் நெஞ்சே... குறள்: "உள்ளக் களித்தலும் கன மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு " கவிதை: நினைத்தால் மயக்கம் பார்த்தால் கிறக்கும் காதலுக்கு தான் உண்டு கள்ளுக்கு இல்லை.. குறள்: "முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகை மொக்குள் உள்ள தொன்று உண்டு" கவிதை: மலரின் மொட்டுக்குள் நறுமணம் மறைந்திருப்பது போல இந்த பெண்ணின் புன்னகை மொட்டுக்குள் மறைந்திருப்பது காதலா...காமமா....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
என் பள்ளி பருவ ஞாபகம் ஞாபங்கள் எல்லாம் ஞாபகங்கள்.... பச்சைகுதிரையும், பம்பரமும் நெல்லுச்சோறும்,நொண்டியும் என் ஞாபங்கள்.... அரையனா இருந்தாலே அரண்மணையை விலைக்கு வாங்குதல் போன்ற என் எண்ணம் ஞாபங்கள்... உப்புச்சத்தும்,சக்கரைநோயும் அறியாமல் நண்பனோடு காக்கா கடி கடித்து தின்ற தின்பண்டங்கள் என் ஞாபங்கள்... பொங்கல்,தீபாவளிக்கு புத்தாடை அணிய காத்திருந்து காத்திருந்து கடைசியில் கிழிந்த உடையை அணிந்து சென்ற பள்ளி நாட்கள் என் ஞாபங்கள்.... தெய்வீக யாத்திரையை விட என் பள்ளி யாத்திரை அதிகம் -என்ற என் ஞாபங்கள்.... மஞ்சள் பையும் மண்பானை நீரும் என் ஞாபங்கள்... கடைசியில் என் உண்மையை ஞாபகம் ஒரு வேலை சோற்றிக்காக பள்ளிக்கு அனுப்பபட்ட பரதேசி நான்....என்ற என் ஞாபங்கள்....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இயற்கை சொன்ன அவலம் ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது இயற்கை... அடர்ந்து உயர்ந்த மரங்கள் இருந்த சோலை-இன்று அகலமான சாலையான அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காவிரி வைகை போன்று கரைபுரண்டு ஓடிய நதிகளில்-இன்று கழிவு நீர் கலக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... காடுகளிலும் சோலைகளிலும் தவழ்ந்து வந்த கார்முகில் தென்றல்-இன்று மூச்சு அடைத்து போன அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .. பொன் விளையும் விளை நிலங்கள்யாவும் - இன்று கட்டிடம் கட்ட பொன் விலைக்கு விற்கப்படும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை... ஊருக்கே நீர் கொடுத்த ஊரணிகள் -இன்று ஊனமுற்று இருக்கும் அவலத்தை எழுதென்று சொன்னது இயற்கை .... ஏடு எடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொல்லது யார்??